குழுவின் தலைவர் தேசிய அணைகள் பாதுகாப்பு அதிகாரம் தலைவர் அணில் ஜெயின் (NDSA டெல்லி).
குழுவின் உறுப்பினர்கள்
ஆனந்த் ராமசாமி நோடல் ஆபீசர் ICED பெங்களூர்,
விவேக் திருபாதி தேசிய அணைகள் பாதுகாப்பு அதிகாரம் உறுப்பினர் (பேரிடர் மீட்பு குழு NDSA டெல்லி)
தமிழகம் சார்பாக
மங்கட் ராம் சர்மா IAS கூடுதல் தலைமை செயலாளர்,சுப்பிரமணியன் தொழில்நுட்ப பிரிவு
கேரளா சார்பாக
திங்க் பிஷ்வால் IAS
கூடுதல் தலைமைச் செயலாளர்
பிரியாஸ் தலைமை பொறியாளர் நீர் பாசனத்துறை.
ஆகிய ஏழு நபர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு இன்று முல்லைப் பெரியாறு அணையினை ஆய்வு செய்வதற்காக தேக்கடி படகுத் துறையில் இருந்து காலை 8.40 மணியளவில் படகில் முல்லைப் பெரியாறு அணைக்கு கிளம்பியது.
இந்த குழு 10 மணிக்கு மேல் முல்லை பெரியாறு மெயின் அணை, மண் அணை, பேபி அணை, உபரி நீர் வழிந்தோடும் மதகுகள், கசிவு நீர் வெளியேறும் கேலரிகள் போன்ற அணைப்பகுதியில் உள்ள அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் தமிழக மற்றும் கேரள பொறியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்
இந்த ஆய்வுக்குப் பின் மாலை 4 மணியளவில் தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் கலந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.