தமிழகத்திலேயே வண்டலூர் பூங்காவிற்கு பிறகு, கோவை மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலக வளாகத்தில் பறவைகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 -ல் அமைக்கப்பட்டது இந்த பறவைகள் மறுவாழ்வு மையத்தில் கோவை மாவட்டத்தில் வாகனங்கள் மோதியோ, மின்சாரம் தாக்கியோ அல்லது நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்படும் பறவைகள் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து முழு பரிசோதனைக்கு பிறகு அந்த பறவைகள் சிறுவாணி, ஆனைகட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் பத்திரமாக விடுவிக்கப்படுகின்றது. மேலும் வாகனங்கள் மோதி கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட பறவைகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் கருவிகளோடு கூடிய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவு கட்டு போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

அதே போல் தாயை இழந்த பறவைக் குஞ்சுகள் இன்குபேட்டர் மூலம் பராமரிக்கப்பட்டு அதன் பின்னர் அவைகள் விடுவிக்கப்படுகிறது. இந்த பறவைகள் மறுவாழ்வு மையத்தில் மயில், கிளி, ஆந்தை, கழுகு உள்ளிட்ட 110 வகையான பறவைகள் இதுவரை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 10,000 மேற்பட்ட பறவைகள் இந்த மறுவாழ்வு மையத்திலிருந்து, சிகிச்சைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சுதந்திரமாக சுற்றி தெரியக்கூடிய பறவைகளை குறிப்பாக கிளி போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வைக்கவும், அதன் இறக்குகளை வெட்டவோ கூடாது என மறுவாழ்வு மைய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகிலேயே பறக்கக்கூடிய சக்தி படைத்த பறவைகளை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என இயற்கை ஆர்வலர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த பறவைகள் மறுவாழ்வு மையத்திற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது சன் செய்திகளுக்காக கோவை செய்தியாளர் தென்னிலவன்.