திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் குடிநீர் வினியோகம் முறையாக இல்லாத பகுதிகள் குறித்தும் அப்பகுதிகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட குழு சார்பில் நடைபெற்ற குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பகுதிகளுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை முறையாக குடிநீர் விநியோகம் செயல்படுத்தப்பட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
மேலும் இப்பதிகளுக்கு விடுபட்டுள்ள பணிகளை உடனடியாக முடித்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.