திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களான காப்பீட்டுத்திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நடைபெறுகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியன சார்பில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகம் உள்ள திருப்பூரில் காப்பீட்டுத் திட்டத்தின் அவசியம் குறித்தும், ஏற்றுமதியாளர்களுக்கான குறிப்பீட்ட காப்பீடுகள், தீ விபத்து மற்றும் தொழிற்சாலை விபத்து ஏற்பட்டால் காப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள், காப்பீட்டு திட்டங்கள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் என்.திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கோவை முதன்மை மண்டல மேலாளர் வி.என்.சந்தீப், மண்டல மேலாளர் சுப்பராவ் உள்ளிட்டோர் பங்கேற்று காப்பீட்டு திட்ட விவரங்களை அளிக்கவுள்ளனர்.