திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், ஆடை வடிவமைப்பு துறையின்
சார்பாக, “ஃபேஷன் எக்லெட் -2025” எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆடை வடிவமைப்புத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் கிளாடியஸ் கிளாமர், பிளாக் & ஒயிட், பார்ட்டி வியர்(wear), ஹாலோகிராபிக் பேக்ஷன், பஞ்சாபூதங்கள், இந்தோ-மேற்கத்திய பேக்ஷன், மினிமலிஸ்ட் பேக்ஷன், ஸ்பிரிங் பேக்ஷன் என பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆடைகளை வடிவமைத்து காட்சிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கல்லூரி மாணவியர் அனைவரும் கண்டு ரசித்தனர்.