திருப்பூர் மாநகர மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமையில் போயம்பாளையம் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அதிமுக சாதனை குறித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் திமுக செய்யவில்லை என்றும், தற்போது நடைபெறும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் பாதுகாப்பு இன்றி உள்ளனர், அதேபோன்று திருப்பூர் மக்களுக்கு அனைத்து திட்டங்களும் அதிமுக அரசுதான் கொண்டு வந்துள்ளது என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பேசினார். இதைத்தொடர்ந்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி கனகராஜ், நீதி ராஜன், பகுதி செயலாளர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். மேலும் டீ கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ குடித்து பிரச்சாரம் மேற்கொண்டது காண்போரை வியக்கச் செய்தது.