தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் ஆலந்தலை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட கட்டிங் பீடி இலைகள் சுமார் 30 கிலோ எடை கொண்ட 33 மூட்டைகளும் முழு பீடி இலை மூட்டைகள் சுமார் 30 கிலோ கொண்ட 49 மூட்டைகளும் மொத்தம் 82 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாரை பார்த்தும் பீடி இலைகளை எடுத்து வந்தவர்கள் படகுடன் தப்பித்துச் சென்றனர்.


கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 1 கோடி என கூறப்படுகிறது.