நியூயார்க்: விண்வெளியில் 280 நாட்களுக்கும் மேலாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் ( Sunita Williams) இன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார்.

திட்டமிட்டபடி அதிகாலை 3.27 மணிக்கு இந்திய நேரப்படி அந்த விண்கலம் புளோரிடா கடலில் இறங்கிய நிலையில் உடனடியாக மீட்பு வீரர்கள் விண்வெளி வீரர்களை அழைத்துச் சென்றனர்.