திருப்பூர்
தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட் ) நேரலை ஒளிபரப்பு செய்வதற்காக திருப்பூர் பேருந்து நிலையம், மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் சார்பில் எல்இடி திரை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 2025-26ம் ஆண்டுக்கான வேலை அறிக்கையானது இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்கள் காணும் வகையில் தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி சார்பில் திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம், மற்றும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை எல்.இ.டி திரைகளில் நேரடியாக பார்த்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் அறிக்கையை நேரலையில் பார்த்து வருகின்றனர்.