வடமாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஹோலி பண்டிகை. இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படக்கூடிய நிலையில் பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் சார்ந்த நகரான திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த மகாராஷ்டிரா , ராஜஸ்தான் , பீகார் , ஒடிசா , உத்தர பிரதேசம் , குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

சொந்த ஊர் செல்லாத வட மாநில தொழிலாளர்கள் திருப்பூரிலேயே இன்று ஹோலிப்பண்டிகையை கொண்டாடினர்.

திருப்பூர் மாநகரில் உள்ள ராயபுரம் , காதர்பேட்டை , காமாட்சி அம்மன் கோவில் வீதி , ஸ்டேட் பேங்க் காலனி , லட்சுமி நகர் , சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து சாலையில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி , சாயங்களை கரைத்து தெளித்து ஹோலிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.