திருப்பூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). இவருக்கு சொந்தமான இடம் இடையர்பாளையத்தில் உள்ளது. சிட்டாவில் பெயர் சேர்க்க வேண்டி இடையர்பாளையம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சிட்டாவில் பெயர் சேர்க்க இடையர்பாளையம் வி.ஏ.ஓ பிரபு ரூ. 7 ஆயிரம் லட்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கார்த்திகேயனிடம் கொடுத்து அனுப்பினர்.

கார்த்திகேயன் நேற்று ரசாயனம் தடவிய 7 ஆயிரத்தை வி.ஏ.ஓ அலுவக உதவியாளர் கவிதா மூலம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி ஆகியோர் வி.ஏ.ஓ பிரபு (45), உதவியாளர் கவிதா(37) ஆகியோரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் உதவியாளர் கவிதா இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.