பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் 10 நாள் பொங்கல் திருவிழா நடைபெறும்.

திருவிழாவின் 9ம் நாளன்று நடைபெறும் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பொங்கல் வழிபாடு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட பொங்கல் திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது.


இதை முன்னிட்டு கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு இன்று நடக்கிறது.

இதனிடையே திருவனந்தபுரம் செல்ல முடியாத கேரளா மக்களுக்காக, திருப்பூர் கேரள சமாஜம் சார்பில், காலேஜ் ரோடு மாகாளி அம்மன் கோவிலில், பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான கேரள மக்கள் பங்கேற்று, ஆற்றுகால் பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருப்பூர் நலன் வேண்டியும், திருப்பூரில் பின்னலாடை தொழில் சிறக்க வேண்டிய இந்த பொங்கல் வழிபாடு ஆனது நடத்தப்பட்டது.