பொள்ளாச்சியை அடுத்த மீன்கரைப் பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது தாராபுரம் பகுதியைச் சேர்ந்த இமாம் அலி (39),பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஷேக் பரீத் (23),மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த சலீம் (23),ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22),குமரன் நகரைச் சேர்ந்த பாவா இப்ராஹிம் (35),முஸ்தபா (25),முகமது அலி (37),மீன் கரை ரோடு பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் என்கின்ற டிவி குமார் (39),ஆகியோர் போதை ஊசிகளை பயன்படுத்தியது தெரியவந்தது.

மேலும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த முரளி குமார் என்பவரிடமிருந்து போதை மருந்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கி,ஊசிகள் மூலமாக உடலுக்குள் செலுத்தி உபயோகப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனை அடுத்து போதை ஊசியை பயன்படுத்திய ஏழு பேரையும் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.