திருமணத்தை மீறிய காதல் ரயிலில் பாய்ந்த இளம்பெண், மினிபஸ் ஓட்டுநர் தற்கொலை. போலீசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் பழநி குதிரையாறு அணைப்பகுதியில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் 35. அப்பகுதியில் மினிபஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிகண்டன் பணிபுரியும் மினிபேருந்தில் பயணம் செய்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி அன்னை சத்யா தெரு ரத்தினசாமி மகள் சம்யுக்தாவுக்கும் 21, பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு இருவரும் பழநியில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேனி வந்தனர். மதுரை சாலை குன்னூர் அருகே, ரயில்வே பாலம் அருகே டூவீலரை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் ஏறி, இருவரும் கட்டியணைத்தவாறு நின்று கொண்டனர். அப்போது போடி சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் இருவரும் உடல் இரண்டாக சிதறிய நிலையில் பலியாகினர்.

ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிதறிய இருவரின் உடல் பாகங்களை சேகரித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் சம்யுக்தா பெற்றோர் பொள்ளாச்சி பெண்ணை காணவில்லை என புகார் அளித்தது தெரியவந்துள்ளது.