கோவை மருதமலை ஐ.ஓ.பி. காலணி பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த வீட்டின் நுழைவு வாயில் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்றது.

பின்னர் அங்கிருந்த வாழையை உண்டு விட்டு வெளியே சென்றது.
இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.