இந்திய கிராண்ட்மாஸ்டரும் 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த குகேஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி வி.ஐ.பி. தரிசனத்தில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த குகேஷ் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ் உலகத் தரவரிசையில் செஸ் கிராண்ட் மாஸ்டராக முதல் இடத்தை பிடிப்பதற்கு கடின உழைப்பு தேவை அதற்கு உண்டான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.
2025 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணியிலும் உள்ளேன். கடவுள் மேல் எனக்கு பற்றும், பக்தியும் உள்ளது. ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தது மன அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்றார்.