சிறுவன் உட்பட வெளி மாநிலத்தைச் சேர்ந்த நால்வர் கைது
பொள்ளாச்சியை அடுத்த நல்லி கவுண்டர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (41).இவர் நேற்று இரவு 9 மணி அளவில் பொள்ளாச்சியில் உள்ள ரயில்வே நிலையத்தின் பின்புறம் உள்ள ராம் நகர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை சிலர் வழிமறித்ததாக தெரிகிறது.
தொடர்ந்து அந்த நால்வரும் அவரை மிரட்டி அவரிடமிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றதாக தெரிகிறது.இது குறித்து கார்த்திகேயன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன்,பாளையங்கோட்டையை சேர்ந்த சுடலை முத்துக்குமரன் (19),மதுரையைச் சேர்ந்த வீரபாண்டி (21),தூத்துக்குடியைச் மகேஷ் சண்முகம்(33) ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.