ஒகேனக்கல்
காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
உறவினரின் இறுதிச்சடங்கத்திற்காக பெற்றோருடன் சென்ற போது பரிதாபம்
உறவினரின் இறுதிச்சடங்கிற்காக பெற்றோருடன் சென்ற போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.
பள்ளி மாணவி
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பி. மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி – சாந்தி தம்பதியினர் இவருடைய மகள் மேனிகா வயது 16.இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் உறவினர் இறந்த சடங்கு நிகழ்ச்சிக்காக பெற்றோருடன் மாணவி நேற்று ஒகேனக்கலுக்கு சென்றாள்.
ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் அவர்கள் ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மாணவி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றபோது ஆற்றின் சுழலில் சிக்கி மூழ்கினாள்.இதனால் அதிர்ச்சடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை காப்பாற்றும் என்றும் முடியவில்லை.
பரிதாப சாவு
இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவி மேனிகாவை மீட்டனர்.இதைப் பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உறவினரின் இறுதி சடங்கிற்காக பெற்றோருடன் சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.