விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள மயிலத்தில் அதிபயங்கரமான வெடி பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில், திண்டிவனம் துணை கண்காணிப்பாளர
பிரகாஷ் உத்தரவின்பேரில்
தனிப்படை பிரிவு போலிசார் விசாரணையில் ஈடுபட்டனர் இந்நிலையில் மயிலம் அடுத்துள்ள நல்லாம்ழூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்,அமித் ஆகியோர் அரசு அனுமதி இன்றியும், உரிய உரிமம் இல்லாமலும் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது மேலும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனையிட்டதில் வீட்டில் இருந்த 276 அதிபயங்கரமாக வெடிக்கக்கூடிய எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள்,
59 ஸ்லாரி மற்றும்
13 கிலோ வெடி மருந்தை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியதுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பரமசிவம் மற்றும் அமீத் ஆகியோரை போலிசார் கைது செய்ததுடன், தப்பி ஓடிய சுரேஷ் பாபு என்பவரை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர் .