கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (27) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இன்று காலை செல்வகுமாரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற செல்வகுமார் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த ஆம்புலன்ஸை செம்மணங்கூர்ர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் ஒட்டிச் சென்றார் 108 ஆம்புலன்ஸ் உளுந்தூர்பேட்டையை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் சேலம் தேசிய நெடுஞ்சாலயில் சென்று கொண்டிருந்த பொழுது முன்னாள் விறகு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கமாக ஆம்புலன்ஸ் மோதியது.

இதில் மேல் சிகிச்சைக்கு சென்ற செல்வகுமார் அவருடைய தாயார் மற்றும் மருத்துவ பணியாளர் காயத்ரி ஆகிய மூன்று பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மற்றும் சாலையில் விறகு சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களையும், விறகுகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.