
தமிழ் கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு நடைபெறும் பல்வேறு விழாக்களில் சிறப்பு வாய்ந்த விழாக்களில் ஒன்று மாசி திருவிழா.
இந்தாண்டிற்கான மாசி திருவிழா கடந்த மார்ச் 3 ம் தேதி கொடியேறறத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.
இந்த மாசி திருவிழாவை முன்னிட்டு , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் காவடிகளை சுமந்தும் , அலகு குத்தியும் முருகனை நோக்கி நேர்த்திகடன் செலுத்திட வருகை தந்து வருகின்றனர்.
அதன்படி, இவ்விழாவின் ஆறாம் திருவிழாவான இன்று , கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் இருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பறவை காவடிகள், காவடிகள், சுமந்து அலகு குத்தியும், திருச்செந்தூர் முருகனை வழிபட மேல ரத வீதியிலுள்ள தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் ஒட்டுமொத்தமாக குழுவாக கூடினர்.
ஒவ்வொருவராக விநாயகர் கோவில் முன்பு முருகனின் திருப்புகழை பாடிய படி பக்தி பரவசத்துடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என அலகு குத்தியும், பால்காவடி, மயில் காவடி புஷ்ப காவடி , பால்குடம், இடும்பன் காவடி , பன்னீர் காவடி என பல்வேறு விதமான காவடிகளை சுமந்த படியும், மேலும் பரவை காவடி எடுத்தும் முருகனின் சன்னதியை நாடி நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
வரும் பக்தர்கள் குழந்தைகளுக்கு முருகர் வேடம், பழனியாண்டவரின் வேடங்களை அணிந்த படியும் சிறுசிறு தேர்களை முதுகில் குத்தி இழுத்து வருகிறார்கள் பக்தர்கள் முருகனே தேடி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து திருச்செந்தூர் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திட வரும் பக்தர்களால் திருச்செந்தூர் முக்கிய சாலைகள் வழியாக திருக்கோவிலுக்கு செல்லும் பாதைகள் , கோவில் வளாகங்கள், கடற்கரை பகுதிகள் என முழுவதும் பக்தர்களின் கூட்டத்தினால் தற்போது நிரம்பி வழிகிறது.
எங்கு பார்த்தாலும் திருச்செந்தூர் சுத்திலும் பச்சை வேட்டி காவி வேட்டி என பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது