தமிழக அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும்.இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்,வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் உள்ளிட்டவைகளிலிருந்து வரும் பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நிரந்தர உண்டியல் மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் காணிக்கை இட்டுச் செல்வது வழக்கம்.

இந்த காணிக்கைகள் மாதம் ஒருமுறை எண்ணப்படும். இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாசாணி அம்மன் கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற குண்டம் திருவிழா நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நேற்று நிறைவு பெற்றது.இதில் நிரந்தர உண்டியல் காணிக்கையாக 1,08,17,186 ம், தட்டு காணிக்கையாக 32,53,032 ம் கிடைக்கப்பெற்றது. மேலும் 286 கிராம் தங்கம் மற்றும் 840 கிராம் வெள்ளியும் உண்டியல் திறப்பில் கிடைக்க பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.