தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே. 5 ம் தேதி வணிகர் அதிகார பிரகடன மாநாடு என்ற பெயரில் 42வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு குறித்த சுற்றுப்பயணம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு மாநாடை சிறப்பாக நடத்துவது குறித்த தீர்மானங்கள் இயற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவ்வமைப்பின் தலைவர் விக்ரமராஜா பேசுகையில் ஒவ்வொரு மாவட்டம் தோறும் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுற்றுப்பயணம் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவும் மின்கட்டண உயர்வு, குப்பை வரி, தொழில் வரி உள்ளிடவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் எனவே தமிழக அரசு இந்த வரிகளை தளர்த்த வேண்டும் , மத்திய அரசு வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது இதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆன்லைன் வர்த்தகம் காரணமாக 27 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது .

எனவே வர்த்தகர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது எனவும் மாநாடு திடல்
55 ஏக்கர் பரப்பளவில் 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்க தலைமை நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்தார்.