மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக
கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் ஆர்வம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜகவினர் இன்று மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் துவங்கி பொது மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகரம் செரிப் காலனி பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி கலந்து
கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்


பாஜக நிர்வாகிகள் செரிப் காலனி பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று மும் மொழிக்கு ஆதரவான கையெழுத்து இயக்க விண்ணப்பங்களில் கையெழுத்து பெற்றனர்.பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் திமுக அரசியல் செய்து வருவதாகவும் தமிழக மாணவர்களை வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டி பேசினார்,

கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை இந்த தேசிய கல்விக் கொள்கை விளங்குகிறது.

திமுக அமைச்சர்களின் குழந்தைகள் இரு மொழி கல்வி திட்டத்தில் படிக்கிறார்கள்,இவர்களது குழந்தைகள் மட்டும் முன்மொழி திட்டத்தில் படிக்க வேண்டும்,மற்றவர்கள் குழந்தைகள் முன்மொழி திட்டத்தில் படிக்கக் கூடாது என கூறுகின்றனர்,சிபிஎஸ்சி கல்விக்கூடங்கள் நடத்துவதும் இந்த திமுகவினர்கள் தான் அதில் மும்மொழி பள்ளி கூடங்கள் நடத்துகின்றனர்,
இந்த மும்மொழி கல்வி திட்டத்தில் முழுக்க முழுக்க அரசியல் செய்கின்றனர்,
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது உருது மொழி கட்டாயமாக்கப்படும் என தெரிவித்த நீங்கள் ஏன் தமிழ் மொழியை கட்டாயமாக்கப்படும் என கூறவில்லை,தமிழகத்தில் ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறுவதற்கு இலக்கு நிர்ணயத்துள்ளோம்,திமுக அரசின் போலித்தனத்தை வெளிப்படுத்தி
மக்கள் மும்மொழி கல்வி திட்டத்தை விரும்புகின்றனர் என்பதை வெளிக்காட்டுவதற்காக இந்த கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது,அனைவருக்கும் சமமான கல்வி என்பது தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது,தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன,தமிழுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள், தமிழை தமிழ்நாட்டில் கட்டாயமாக்க முடியுமா,சமஸ்கிருதம் என்பது தொன்மையான இலங்கியங்கள் உள்ளடக்கிய ஒன்று,அறிவியல் நூல்கள் உள்ளன,பொருளாதாரத் துறையில் அர்த்த சாஸ்திரம் சமஸ்கிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது,இவர்களது குடும்ப பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் உள்ளன,உதயநிதி இன்ப நிதி என பெயர் வைத்துள்ளனர்,