திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கியின் புதூர் பிரிவு கிளையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளதாக கூறி 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள புதூர் பிரிவு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்படுகிறது,
இந்த வங்கியில் திருப்பூர் ,பல்லடம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு துவங்கி தினமும் வரவு, செலவு வைத்துள்ளனர்,
இந்த நிலையில் இன்று திடீரென வங்கி நிர்வாகம்
ஒவ்வொரு வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலும் 2000, 4000, 6000 ,20000 என 60-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் இடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் வரை பணத்தை பிடித்தம் செய்துள்ளனர்,
வங்கியில் பணம் இருக்கும் என பணத்தை எடுப்பதற்காக வந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் அந்த பணம் வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்திருப்பது அப்பொழுதுதான் தெரியவந்தது இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் வங்கி முன்பு திரண்டு வங்கியை முற்றுகையிட்டு வங்கி மேலாளர் இடம் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென தங்களது கணக்கில் பணத்தை பிடித்து இருப்பது ஏன் என்றும் மருத்துவமனைக்கு என அவசர செலவுக்காக வைத்திருந்து பணத்தை ஏன் பிடித்தம் செய்து உள்ளீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,
இதனிடையே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கூறுகையில்,
கொரோனா காலத்தில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தியும்,அதில் செக்ரிட்டனான தொகைக்கு தற்பொழுது வட்டியுடன் பணத்தை பிடித்தம் செய்திருப்பதாகவும்,
வங்கி நிர்வாகம் பணம் பிடித்தம் தொடர்பாக எந்த விதமான குறுஞ்செய்தி எதுவும் அனுப்பாமல் திடீரென தங்களது கணக்கில் இருந்து பணத்தை பிடித்தம் செய்திருப்பது ஏன் என கேட்டதற்கு சரியான பதிலை வங்கி மேலாளர் தெரிவிக்கவில்லை என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் இரண்டு நாளில் பதில் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர் தங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ருகன் -வாடிக்கையாளர்