திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கொங்கல் நகரம் கிராமத்தில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முதலில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 1987 இல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தின் போது கள்ளுக்கு தடை ஏற்பட்டது. கள்லில் போதைக்காக மாத்திரைகளை கலப்பதாக கூறி அப்பொழுது தடை விதித்தனார்.
ஆனால் தற்பொழுது கஞ்சா, போதை மாத்திரை, போதை மிட்டாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை .
அதைப்போல் தமிழகத்தில் திமுக அரசு கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார் இதைத்தொடர்ந்து அண்ணாமலை மேடையில் பேச முற்பட்டபோது கள் இயக்கத்தினர் கள்லை குடிக்க வற்புறுத்தினர். ஆனால் அண்ணாமலை அதற்கு மறுத்துவிட்டார் அதற்கு பதிலாக பதநீர் குடித்தார். இதன்பின் மேடையில் பேசி அண்ணாமலை தமிழகத்தில் சட்டப்படி கள் குடிக்க முடியாது அதை நாம் அங்கீகரித்து சட்டப்படி அனுமதி பெற்ற பிறகு நாம் அதை குடிக்கலாம் அதனால் தான் இன்று கள் குடிக்க வில்லை என்றார். தாங்கள் ஆட்சிக்கு வந்து கள்லுக்கு அனுமதி கிடைத்தவுடன் நான் அதைக் குடிப்பேன் என்றார். டாஸ்மாக் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.5 லட்சம் கோடி பணம் கிடைக்கிறது.
அப்பாவி விவசாயிகளுக்கு கிடைக்க டாஸ்மாக்கை நிறுத்திவிட்டு கள்ளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் என்றார். மீண்டும் தேன் கூட்டில் தேன் எடுக்கும் பொழுது அரசாங்கம் தேனை எடுத்துவிட்டு கையை மட்டும் தான் நக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் வரி முழு தேனையும் எடுத்து பயன்படுத்தக் கூடாது, தேன் என்பது விவசாயிகள் அதன் பலன் அவர்களுக்கு தான் கிடைக்க வேண்டும் என்றார். கள்லில் 3.8 சதவீதம் தான் ஆல்கஹால் உள்ளது.
எனவே கள்லை உணவுப் பொருளாக தான் பார்க்க வேண்டும் என்றார். பீகாரில் மதுவிலக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . வரும் 2026 தேர்தலில் கள் இறக்குவது குறித்து தேர்தல் வாக்குறுதி வழங்கப்படும் என்றார்.
அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில்:
“இன்று தேசிய ஜனநாயக கூட்டணிப் பொருத்த அளவிலே கள் இறக்க வேண்டும் என்பதில் மிகத் தெள்ளத் தெளிவாக இருக்கின்றோம். எந்த அளவிற்கு ஒரு இயற்கை உணவு , பல நோய்களுக்கு பனைமரம், தென்னை மரம் ஆகியவற்றில் இருந்து வரக்கூடிய பால் இதை வந்து பால் என்று தான் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து வரக்கூடிய எல்லா பொருட்களும் நீராவாக இருக்கட்டும், தெலுவாக இருக்கட்டும் உணவுப் பொருட்களாக பார்க்க வேண்டும். கள்லைப் பொறுத்தளவில் 3.8% ஆல்கஹால் உள்ளது. சாதாரண பீர் எடுத்துகிட்டீங்கன்னா 12% க்கு குறைவாக ஆல்கஹால் கிடையாது. ஒரு கார்த்திகை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் 40% ஆல்கஹால் உள்ளது. அது எல்லாம் விற்கின்றார்கள் மக்கள் குடிக்கின்றனர். கள்லைப் பொருத்தவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வர வேண்டும், விவசாய பெருமக்களுக்கு அதன் மூலமாக வருவாய் கிடைக்க வேண்டும். அதே ரீதியில் எல்லா மனிதர்களுக்கும் சென்னையில் இருந்து வரக்கூடிய எல்லா பொருட்களும் அதனுடைய பால் மகத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவாக இருக்கிறோம் 2026 மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்பொழுது கள் இறக்குவதற்கான அனுமதியை நிச்சயமாக நாங்கள் கொடுக்கத்தான் போகின்றோம்… நிறைய கட்சிகள் ஒரு நிலைப்பாட்டிற்கு வர இருக்கின்றார்கள். 2026 நிச்சயம் கள்ள இறக்குவதற்கான அனுமதி கொடுக்கத்தான் போகின்றோம் .
மக்களுடைய ஆதரவும் ,விவசாய பெருமக்களுடைய ஆதரவு தென்னை மரம், பனைமரம் தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு எல்லா விவசாய பெருமக்களும் எங்களோடு நிற்க வேண்டும் என அன்பான வேண்டுகோளை வைக்கின்றோம்” என தெரிவித்தார்.