சம்பவ இடத்தில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம்….

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சம்மந்தம்பாளையம் பிரிவு அருகே போலீஸ் என கூறி வாகன.சோதனையில் ஈடுபட்டு ரூபாய் 1 கோடியை பிடுங்கி சென்ற 4 நபர்களுக்கு அவிநாசி பாளையம் காவல்துறையினர் வலைவீச்சு….

கரூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை இவரது ஓட்டுநர் ஜோதி என்பவரை அழைத்துக் கொண்டு ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தங்க நகைகள் வாங்குவதற்காக கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவிநாசி பாளையம் காவல் நிலைய பகுதி சம்பந்தம் பாளையம் பிரிவு அருகே வரும்போது காரில் வந்த நான்கு நபர்கள் வாகனத்தை மறித்து தாங்கள் போலீஸ் எனக் கூறி வெங்கடேஷ் வந்த காரில் மூன்று நபர்கள் ஏறி உள்ளனர்,

பிறகு வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் அவிநாசிபாளையம் to தாராபுரம் ரோட்டில் செல்லுமாறு மிரட்டியதாகவும் வேங்கிபாளையம் வாய்க்கால் அருகே வரும்போது வாகனத்தை நிறுத்த கூறி வெங்கடேஷிடம் இரண்டு பேக்கில் இருந்த ரூ. 1 கோடியே 10 லட்சம் பணத்தையும் அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்களையும் பறித்துக் கொண்டு மற்றொரு காரில் ஏறி மூன்று நபர்களும் சென்று விட்டதாகவும் பின்பு வெங்கடேஷ் மற்றும் அவருடைய டிரைவர் ஜோதி என்பவரும்  மேற்கண்ட சம்பவத்தை இன்று காலை காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதலில் காங்கேயம்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது சம்பவம் நடந்த இடம் அவினாசி பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என தெரிவித்ததால் தற்போது அவிநாசி பாளையம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மேலும் தற்போது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் இதே பகுதியில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்தில் தனியாக இருந்த மூன்று பேர் கொடூரமான முறையில் வட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அவிநாசி பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்பு மின் இணைப்புகள் வழங்காததால் தற்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பது காவல்துறையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.