தேனி மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட கல்குவாரி கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது.இங்கிருந்து கட்டுமான பொருட்களுக்கு தேவையான ஜல்லி கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிரஷர்களில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு முறையான ஜிஎஸ்டி பில்லுடன் செல்லும் லாரிகளை அதிகாரிகள் மறித்து நடவடிக்கைக்கு உட்படுத்தி வருவதால்.கல்குவாரிகள் கிர்சர்கள் தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக குவாரி கிரஷர்கள் சங்கத்தின் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அந்தந்த குவாரி கிரஷர்களில் கனிம பொருட்கள் இருப்பு மையம் அமைக்க அனுமதிக்கோரி. அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. கனிம பொருட்கள் இருப்பு மையம் அமைக்க அனுமதி கோரியும்,கல்குவாரி கிரஷர் விற்பனையில் நடை சீட்டு நடைமுறையை முறைப்படுத்த கால அவகாசம் கேட்டும்,
தேனி மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரி கிரஷர், லாரி உரிமையாளர் சங்கம், கட்டுமான சங்கம், பொறியாளர் சங்கம் இணைந்து இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரி கிரஷர்கள் இன்று முதல் மூடப்படுவதால், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு தட்டுட்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.