நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியூரில் இருந்த சமயத்தில் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் சம்மன் கொடுக்காமல் வீட்டில் ஒட்டி விட்டு சிறிது நேரம் கழித்து சம்மன் காணவில்லை என வீட்டில் அத்துமீறி நுழைந்து சீமான் மெய்காப்பாளரை கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியூரில் இருக்கிறார் என நன்கு அறிந்தும் அவரது குடும்பத்தினரிடம் சம்மன் வழங்காமல் வீட்டின் முன்பு ஒட்டிவிட்டு காவல்துறையினர் கடும் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம் எனவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்