
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து திருப்பூர் வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் குழந்தைகள் மத்திய அரசை கண்டித்தும் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்தும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.