
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் மேற்கொண்டார். மகா சிவராத்திரி உருவான தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சிவராத்திரி தினத்தை ஒட்டி நேற்று நள்ளிரவு லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிலையில் பிரபல திரைப்பட நடிகையான ஆண்ட்ரியா இன்று காலை அண்ணாமலையார் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் தரிசனம் மேற்கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகரை வணங்கி தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார்.சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த பிரபல திரைப்பட நடிகை ஆண்ட்ரியாவை பொது மக்கள் ஆர்வத்துடன் அவருடன் பார்த்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.பின்னர் திருக்கோயில் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.