தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர் காங்கிரஸிற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தவெக உறுப்பினர்களிடம் 200 ரூபாய் பணமும் ஒரு பக்கெட்டும் கொடுத்து இளைஞர் காங்கிரஸுக்கு இழுப்பதாக தவெக உறுப்பினர் குற்றச்சாட்டு பிடித்துள்ளார்

இதுகுறித்து உறுப்பினர் மகேஷ் கூறுகையில், நெருப்பெரிச்சல் பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை வைத்து பதிவு செய்து கட்சியில் இணைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக கட்சியில் இணைபவர்களுக்கு 200 பணமும் ஒரு பக்கெட் இலவசமாக கொடுத்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி தவெக உறுப்பினர்களையும் அழைத்து 200 ரூபாய் பணம் தருவதாகவும் ஒரு பக்கெட் தருவதாகவும் கூறி கட்சியில் இணைய கூறியுள்ளனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளரான சோல்ஜர் மாத்யூ ஆகியோர் இதனை செய்து வந்துள்ளனர்.

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் பெயரை கெடுக்கும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இது குறித்து கட்சி மேலிட நிர்வாகிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.