காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்- தயங்கி நின்ற அரசு பள்ளி மாணவியை தனக்கு அருகில் நாற்காலியில் அமர வைத்து கல்வி குறித்து கேட்டறிந்த- திருகுறளை கேட்டறிந்து விளக்கம் கேட்டு “ஆல் தி பெஸ்ட் ” கூறிய ஆட்சியர் கடலூர் மாவட்டம் காட்டுமனரனார்கோவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்யா செந்தில்குமார் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக தயங்கி நின்ற மாணவியை – தன் அருகில் அமரவைத்த மாவட்ட ஆட்சியர் எய்யலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவியை அருகில் நாற்காலியில் அமர வைத்து கல்வி குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாணவிகளிடம் பல்வேறு கல்வி சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பி நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.