நாகர்கோவில்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை பகுதியில் உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் திடீரென காட்டு தீ பிடித்து. தீ மலை அடிவாரம் உள்ள பகுதி வரை வரை சென்று மளமளவென கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இந்த மலையில் காய்ந்த புற்கள், புதர்கள், சிறிய மரங்கள் இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது. மலை அடிவாரத்தில் அரசு உதவிபெறும் மகளிர் கல்லூரி ஒன்றும் உள்ளது. தற்போது கல்லூரி அருகே தீ மளமளவென பற்றி எரிந்து வருவதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் மாணவிகளை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தற்போது நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்க போராடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.