
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன்கள் குமார் மற்றும் சக்திவேல்
அண்ணன் தம்பிகளுக்கு இடையே சுமார் 20 வருட காலமாக இரண்டு ஏக்கர் அளவில் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சக்திவேல் உயிர் இழந்த நிலையில் சக்திவேலின் மனைவியான தனலட்சுமி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரச்சனை உள்ள நிலத்தில் குமார் குடும்பத்தினர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தனலட்சுமி இந்த நிலத்தில் மாடு மேய்க்க கூடாது எனக் கூறியுள்ளார்.
இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதனால் ஆத்திரம் அடைந்த குமார் குடும்பத்தினர் வெட்டு கத்தியால் சக்திவேலின் மனைவியான தனலட்சுமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பவித்ரா ஆகிய மூன்று பேரையும் வெட்டியுள்ளனர். இதன் காரணமாக காயம் அடைந்த மூன்று பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தனலட்சுமி மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குமார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலப் பிரச்சனை காரணமாக சொந்த பந்தமே வெட்டி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.