திருப்பூர் காங்கேயம் சாலை வண்ணாந்துறை புதூர் அடுத்த ஜெயலட்சுமி நகர் பகுதியில் விஷம் வைத்து தெரு நாய்கள் வீட்டு நாய்கள் மற்றும் 15 கோழிகள் கொல்லப்பட்டதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அவிநாசி பாளையம் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் ஜெயலட்சுமி நகர் பகுதியில் ஏராளமான நாய் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நாய்கள் அப்பகுதி விவசாயிகள் வளர்க்கும் கோழி யை கடித்து கொன்று வந்ததும் தெரியவந்துள்ளது இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான 15 கோழிகள் உயிரிழந்து உள்ளது.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சிலரது நாய்கள் மற்றும் தெரு நாய்கள் என 14 நாய்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. அந்தப் பகுதியில் வாழை இலையில் சாதம் வைத்து அதில் பூச்சிக்கொல்லி குருணை மருந்து கலந்து வைத்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த நாய்களை அப்பகுதி பொதுமக்கள் அருகருகே புதைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் இணைந்து புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி எடுத்து விஷம் வைக்கப்பட்டதா என ஆய்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர் மேலும் விஷம் வைத்துக் கொன்ற நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெறி நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் சூழலில் இதுபோன்று ஆங்காங்கே சிலர் நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.