திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் வந்து கொண்டு இருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் இருந்து தெரு நாய் ஒன்று திடீரென ரோடை கடந்துள்ளது அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் நாய் மாட்டிக்கொண்டது அப்போது இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.

அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது மேலும் பின்னால் வந்த லாரியும் திடீரென நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.