சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வாயிலில் திருப்பத்தூர் தாலுகா மாதவராயன்பட்டியை சேர்ந்த அழகு என்பவரின் மனைவி இந்திராணி உடலில் மண்ணென்னையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார் தனது கணவர் அழகு மற்றும் அவரது சகோதரர் சுப்பையா ஆகியோர் தனக்கு சொந்தமான 80 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும்,
அதற்கு எஸ்.வி மங்கலம் காவல்துறையினர் உடந்தையாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் இந்திராணி குற்றம் சாட்டி தீக்குளிக்க முயன்றார். இந்திராணியை காவல்துறையினர் மீட்டு முதலுதவி செய்தனர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது..