கும்பகோணம் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் SFI அமைப்பினர்கும்பகோணம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ் எப் ஐ அமைப்பினர் காவல்துறையினரின் தடையை மீறி தலைமை தபால் அலுவலகம் உள்ளே செல்ல முற்பட்டனர்

அப்போது காவல்துறையினருக்கும் SFI அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.உடனடியாக காவல்துறையினர் SFI அமைப்பினரைகைது செய்தனர் இதனால் தலைமை தபால் அலுவலகம் பகுதியில் பரபரப்பு நிலவியது