நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. முதுமலையை போன்று அங்கும் வரும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரியாக அழைத்து செல்லபடும் நிலையில் நேற்று வழக்கம் போல சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் வாகன சவாரி சென்றனர்.
அப்போது புலியின் நடமாட்டம் இருப்பதை அறிந்த வாகன ஓட்டி வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரத்தில் புதரில் இருந்து வெளியே வந்த தாய் புலி ஒன்று சாலையில் குட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? என்று பார்த்தது. ஆபத்து ஏதும் இல்லை என்பதை உணர்ந்த தாய் புலி குட்டி புலிகளை திரும்பி பார்த்தவாறு நின்றது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு புலிக்குட்டிகளும் க்யூட்டாக சாலையை கடந்து ஓடினா. அதனை வனத்துறை வாகன ஓட்டுனர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.