திருவாரூரில் உலகப்புகழ்பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோவிலில் ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7ம்தேதி நடைபெறஉள்ளது.

இந்த தேரோட்ட விழாவிற்கு பந்தக்கால்நடும் முகூர்த்த நிகழ்ச்சியானது தைப்பூச நாளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று தியாகராஜசுவாமி திருக்கோவிலிலிருந்து திருஞானசம்பந்தர் ஆயிரம் கால்மண்டபத்தில் உள்ள சுவாமிக்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டது .

தொடர்ந்து கீழவீதியில் உள்ள ஆழித்தேரின் முன்பாக சிவாச்சாரியார்கள் முகூர்த்த காலில் சந்தனம், பால், விபூதி,இளநீர் போன்ற பல்வேறு பூஜைபொருள்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் ஏறாளமான பக்தர்கள் ,மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.