விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்
இவர் தனது உறவினரின் இரண்டு வயது குழந்தையான தர்ஷனை கடைக்கு அழைத்துக் கொண்டு புறங்கரையில் இருந்து இரு சக்கர வாகனத்தில்
ஓலக்கூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார் அப்போது அவர் தனது இருசக்கர வாகனத்தின் மூலமாக ஒலக்கூர் பகுதியில் உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது திண்டிவனத்தில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற கார் ஒன்று அவர்கள் மீது பலமாக மோதிய விபத்தில் மணிகண்டன் மற்றும் இரண்டு வயது குழந்தை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதில் இரண்டு வயது குழந்தை தர்ஷன் சம்பவ இடத்தில் பலியான நிலையில், மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒலக்கூர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, பலத்த காயமடைந்த மணிகண்டனை 108 வாகனத்தின் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குழந்தையின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் குழந்தையின் உறவினர்கள் கதறி அழுவும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.