ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா பணிகள் குறித்து சாலை பாலத்தில் மேடை அமைத்து மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸ்சவ் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் அருகாமையில் மத்திய அரசு சார்பில் ரூபாய் 550 கோடி மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்கு பாலம் அமைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்றது
புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்களை கொண்டது. பாலத்தின் ஆயுட்காலம் 58 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது
.இந்நிலையில் புதிய செங்குத்து ரயில் தூக்குபாலப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று மதுரை கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்ஸ்சவ் தலைமையில் நடைபெற்றது.
இதற்கென பிரத்தியேகமாக பாம்பன் சாலை பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு மேடை அருகாமையில் ரயில்வே அதிகாரிகள் கேமராக்கள் மூலம் பாம்பன் புதிய செங்குத்து பாலத்தில் கப்பல் கடந்து செல்வது ரயில்களை இயக்கி சோதனை மேற்கொள்வது உள்ளிட்டவை படம்பிடிக்கப்பட்டன இந்த முன்னோட்டத்திற்கான காரணம் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது என அனுமானிக்கப்படுகிறது .மேலும் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் பழைய ரயில் பாலம் ஆகியவை திறந்து கப்பல் கடந்து செல்வதையும் ரயில்கள் கடப்பதையும் சாலை பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.