கன்னியாகுமரி மாவட்ட நபார்டு மற்றும் மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்தும் குமரி சுற்றுலா தலத்தில் காந்தி மண்டபம் அருகில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் நாஞ்சில் திருவிழா கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைப்பெறுகிறது. இதில் மார்த்தாண்டம் தேன், கஸ்தூரி மஞ்சள், மிளகு, வாழைநார்
கைவினைப் பொருட்கள், கடல் சிப்பிகளை வைத்து
தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், குமரி மட்டி
வாழை, குமரி கிராம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை
கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.
கன்னியாகுமரி மாவட்ட நபார்டு மற்றும் மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் நாஞ்சில் திருவிழா கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
நாஞ்சில் திருவிழா நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் அமைந்துள்ள பூம்புகார் மையத்தில் 50 விற்பனை அரங்குகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த கண்காட்சி மூலம் பல்வேறு மாநிலத்தில் இருந்து குமரிக்கு வரக்கூடிய சுற்றுலாப்
பயணிகள் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை வாங்கி செல்வார்கள்.இதன்
மூலம் நம்முடைய புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அறிமுகமாகும். குறிப்பாக
மார்த்தாண்டம் தேன், கஸ்தூரி மஞ்சள், மிளகு, வாழைநார்
கைவினைப் பொருட்கள், கடல் சிப்பிகளை வைத்து
தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், கன்னியாகுமரி மட்டி
வாழை, கன்னியாகுமரி கிராம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை
கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.