திருப்பூர் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலமாக பயனடைந்து வருகின்றது‌. விவசாய பாசனத்திற்கு கோவில் வழி அருகே பிஏபி வாய்க்கால் மூலமாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமான ஒன்று.

பல நேரங்களில் கடைமடைகளுக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவி வருகிறது . மீண்டும் தண்ணீர் வரும்பொழுது வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் இந்த ஆண்டு கடைமடை பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்படாமல் குப்பை குளங்கள் குவிந்து காணப்பட்ட நிலையில் அப்படியே தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது

இதன் காரணமாக குப்பைகள் வாய்க்கால் முழுவதும் அடைத்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் வழிந்து ஓடுகிறது. பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வரும் நிலையில் சாலையில் வாகன ஓட்டிகளும் குடியிருப்பு வாசிகளும் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக குப்பை குளங்களை அகற்றி தண்ணீர் வீணாகாமல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.