டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு இன்று வெளியாகி அதில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதை நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும் டெல்லி கேட் வடிவில் செய்யப்பட்ட கேக்கில் “NOW DELHI 2025 SOON TAMILNADU 2026 ‘என்று எழுதப்பட்டிருந்தது.அந்த கேக்கை வெட்டி பாஜக தொண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.