12 ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் தெப்பல் உற்சவத்தில் முதல் நாளான இன்று இரவு சீதா லட்சுமண சமேத கோதண்டராமர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டாம் நாளான நாளை இரவு ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் பார்த்தசாரதி சாமியும், 8 ஆம் தேதி கல்யாண வெங்கடேஸ்வர சாமி, 9 ஆம் தேதி ஆண்டாள் தாயாருடன் கிருஷ்ணர், 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கோவிந்தராஜ சுவாமி தெப்பலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.