பழனி மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி கோயில் எதிரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதிகாலையில் பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையிலிருந்து கரும்புகை வெளியானது. அருகில் இருந்தவர்கள் கடையில் தீ பற்றியதை உணர்ந்து பழனி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பூட்டி இருந்த கடையை உடைத்து பார்த்தபோது கடைக்குள் தீ பற்றி எரிந்தது தெரியவந்தது. உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். பூஜை பொருள் விற்பனை செய்யும் கடை என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய நெய், சூடம், பத்தி உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது. நெல்லையில் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த தீபத்தில் கடையில் இருந்த பூஜை பொருட்கள் அனைத்தும் முற்றிலும் இருந்து நாசமானது .காலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அடிவாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.