கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையோர பகுதியான மயிலாறு அரசு ரப்பர் கழக தொழில் கூட வளாகத்தில் சுயம்பு லிங்கம் என்பவர் பத்து ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, அன்னாசி பயிர்களை சேதப்படுத்திய யானை கூட்டம் பல லட்சம் சேதம் அருகே ரப்பர் தோட்ட குடியிருப்பு உள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் தோட்டமலை,கிளாமலை,மோதிரமலை,மயிலாறு உட்பட 48 மலையோர கிராமங்கள் உள்ளன இந்த பகுதியில் அரசு, தனியார் ரப்பர் தோட்டங்களும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் , கோதையாறு மின் நிலையம் மின்வாரிய குடியிருப்புகள் மற்றும் ஆதிவாசி பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன மயிலாறு பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் பூட்டி கிடந்த அரசு ரப்பர் கழக தொழில் கூடத்தை லீசிற்கு எடுத்த அந்த பகுதியை சேர்ந்த சுயம்பு லிங்கம் என்ற விவசாயி பத்து ஏக்கர் பரப்பளவில் வாழை , அன்னாசி விவசாயம் செய்து வந்தார் இந்த நிலம் முழுக்க சுற்று சுவர் இருந்த நிலையில் இந்த நிலத்தின் நுழைவு வாயிலை உடைத்த ஒன்பதிற்கும் மேற்பட்ட யானை கூட்டம் விளை நிலத்தில் புகுந்து அன்னாசி, வாழை பயிர்களை சேதப்படுத்தி அங்கேயே முகாமிட்டு உள்ளது இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது அதன் அருகே மயிலாறு ரப்பர் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு இருப்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் யானைகளை விரட்ட வன துறையினர் முயன்று வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது