திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து உள்ளனர். இந்த பேருந்து சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை செங்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை முந்த முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஈரோடு தனியார் கல்லூரியில் பயின்று வந்த பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 21 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார் யாதவ் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்

இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றது. விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கை கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளதனதாக கூறப்படுகிறது.